சினிமா
“காந்திக்குப்பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா கலாம்”- கமல்ஹாசன்
“காந்திக்குப்பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா கலாம்”- கமல்ஹாசன்
இன்று மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் “காந்திக்குப்பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா அப்துல் கலாம்” என்று பிறந்தநாளை நினைவுக் கூர்ந்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், ”நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.