நடிகர் ஆரியின் மெளன வலை படத்திற்கு அடைமழையிலும் இன்று பூஜை போடப்பட்டது.
சென்னை நகரமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த மழையிலும் மெளனவலை திரைப்படத்திற்கு பூஜை போட்டப்பட்டுள்ளது. இதில் ஆரி நாயகனாக நடிக்கிறார். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தில் ஸ்மிருதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா நடிக்கிறார்கள். "களம்" படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு பாரூக் பாஷா. இசை, ஜாவித் ரியாஸ். படத்தொகுப்பாளர், பிலோமின் ராஜ். இன்று நடைபெற்ற பட பூஜையில் நடிகர் சாந்தணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.