உங்களை காதலிக்கும் ஓவியாவை நீங்கள் திருமணம் செய்வீர்களா என பிக்பாஸ் வீட்டு சகாக்கள் ஆரவை கேட்ட போது பெற்றோரின் முடிவே முக்கியமானது என கூறியுள்ளார்.
ஆரவோடு ஏற்பட்ட காதலில் வந்த மோதல், பிக்பாஸ் வீட்டில் தனிமை உள்ளிட்ட காரணங்களால் தானாகவே அங்கிருந்து வெளியேறினார் ஓவியா. பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு தெரிவித்தாலும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு, ஆர்த்தியும், காஜலும் சேர்ந்து ஆரவின் வாயை கிளற ஆரம்பித்தனர். " ஆரவ் ஓவியாவை நீ மிஸ் பண்றியா..? பிக்பாஸ் வீட்டிலிருந்து நீ வெளியேறும் போது ஓவியா உனக்காக காத்திருந்தால் என்ன செய்வாய்..? எனக் கேட்டனர். அதற்கு முதலில் சிறிது அமைதி காத்த ஆரவ், ஓவியா எனக்கு நல்ல ஒரு தோழி. இந்த வீட்டில் அவளை மிகவும் மிஸ் பண்றேன் என சொல்லி முடிப்பதற்குள், அடுத்த கேள்வி எழுந்தது. ஓவியா காதலை ஏற்று அவரை மணம் முடிப்பியா என கேட்டபோது, இதுகுறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்த ஆரவ், என் பெற்றோரின் முடிவு இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம் என்றார்.
ஒருவேளை உன் பெற்றோர் ஒகே சொன்னால் அடுத்தது திருமணம் தானா என காஜல் அடுத்த தீயை கொளுத்தி போட, சிறிது தயக்கம் காட்டிய ஆரவ் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இருப்பினும், இதற்கெல்லாம் இன்னும் நிறைய காலம் இருப்பதாக தெரிவித்த ஆரவ், இதுகுறித்து முடிவெடுக்கவும் காலம் இருக்கிறது. இப்போது இதுகுறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.