விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க இருக்கிறார்.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கொண்ட ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றை சல்யூட் என்ற பெயரில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் மத்தாய் திரைப்படமாக எடுக்கிறார். இந்த படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிப்பதோடு மட்டுமில்லாமல் ரூனி ஸ்க்ரூவலா மற்றும் சித்தார்த்ராய் கபூர் ஆகியோருடன் இணைந்து படத்தினை தயாரிக்கவும் அமீர்கான் முடிவு செய்துள்ளார். மல்யுத்த ஜாம்பவான் மகாவீர்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தங்கல் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அமீர்கான் நடிக்கும் இரண்டாவது வாழ்க்கை வரலாற்றுப் படம் இது.