\
அமீர் கானின் தங்கல் ரூ.2000 கோடி வசூல் செய்து சாதனை

அமீர் கானின் தங்கல் ரூ.2000 கோடி வசூல் செய்து சாதனை

அமீர் கானின் தங்கல் ரூ.2000 கோடி வசூல் செய்து சாதனை
Published on

அமீர் கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம் ரூ.2000 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ படம் ரூ.800 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை சீன மொழியில் டப் செய்து கடந்த மே மாதம் சீனாவில் ரிலீஸ் செய்தனர். சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் ரூ.550 கோடி வசூல் செய்து ரூ.1000 கோடியை தாண்டியது. தொடர்ந்து சீன மக்கள் கொடுத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், ‘தங்கல்’ படம் தற்போது ரூ.2000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்காப்புக் கலைகளில் கைதேர்ந்தவர்களான சீன மக்கள், மல்யுத்தப் படமான ‘தங்கல்’ படத்துக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளனர். இந்திய திரைப்படங்களில் ரூ.2000 கோடி வசூலை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘தங்கல்’ பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com