\
விவாகரத்துக்குப்பின் படப்பிடிப்பில் மகனுடன் டேபிள் டென்னிஸ் ஆடிய அமீர்கான் - கிரண் ராவ்

விவாகரத்துக்குப்பின் படப்பிடிப்பில் மகனுடன் டேபிள் டென்னிஸ் ஆடிய அமீர்கான் - கிரண் ராவ்

விவாகரத்துக்குப்பின் படப்பிடிப்பில் மகனுடன் டேபிள் டென்னிஸ் ஆடிய அமீர்கான் - கிரண் ராவ்
Published on

சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்த அமீர்கானும் இயக்குநர் கிரண் ராவ்வும் ‘லால் சிங் சட்டா’ படப்பிடிப்பில் ஒன்றாக டேபிள் டென்னிஸ் ஆடிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

ஆஸ்கார் விருதுகளைக் குவித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிகர் அமீர்கான் அதிகாரபூர்வமாக நடித்து வருகிறார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி வருகிறார். அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் தனது மகன் ஆசாத் ராவ் கான் மற்றும் முன்னாள் மனைவி கிரண் ராவுடன் அமீர்கான் உற்சாகமுடன் டேபிள் டென்னிஸ் ஆடியுள்ளார். அதோடு, நடிகர் நாக சைதன்யாவுடனும்  விளையாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில்தான், அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவ்வும் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனாலும், தொழில் ரீதியாக பணிபுரிவோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com