\
மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆகிறார் ஆமிர்கான்!

மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆகிறார் ஆமிர்கான்!

மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆகிறார் ஆமிர்கான்!
Published on

மகாபாரதக் கதையில் கிருஷ்ணராக பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான் நடிக்கிறார்.

பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத் தைத் தழுவி ’ரெண்டாமூழம்’ என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகிறது என கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார் என்றும் ஸ்ரீகுமார் மேனன் இயக்குவார் என்றும் கூறப் பட்டது. பீமனின் பார்வையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் எடுக் கத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை எடுக்க கால தாமதம் ஆக்குவதாகக் கூறி, ஒப்பந்தம் முடிந்து விட்டதாக எம்.டி.வாசுதேவன் நாயர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், மோகன்லாலின் ஒடியன் படத்தை இயக்கியதால் காலதா மதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில் மகாபாரதக் கதையில் கிருஷ்ணராக நடிக்க, தான் ஆசைப்பட்டதாகவும் ஆனால், அந்த கேரக்டரை ஆமிர்கான் பிடித்து விட்டதாகவும் நடிகர் ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

அதாவது மகாபாரத கதை வெப் சீரியஸாக, ஏழு பாகங்களாகத் தயாரிக்கப் படுகிறது. இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதில், கிருஷ்ணராக ஆமிர்கான் நடித்துவருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com