நடிகர் அமீர் கானுக்கு பன்றி காய்ச்சல்

நடிகர் அமீர் கானுக்கு பன்றி காய்ச்சல்
நடிகர் அமீர் கானுக்கு பன்றி காய்ச்சல்

பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புனேவில் நடைபெற்ற நிகழ்வில் அமீர் கான் மற்றும் அவரது மனைவி பங்கேற்பதாக இருந்தது. இந்த சூழலில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு அது பரவக் கூடாது என்பதால் எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை என்றும் கூறினார். தற்போது அமீர்கானும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவாரத்துக்கு அமீர்கான் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 52 வயதாகும் நடிகர் அமீர்கான் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com