பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ஆலுமா டோலுமா பாடல்!

பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ஆலுமா டோலுமா பாடல்!
பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ஆலுமா டோலுமா பாடல்!

வேதாளம் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆலுமா டோலுமா' பாடல் மொழி தெரியாவிட்டாலும் வெகுவாகக் கவர்ந்துவிட்டதாக பாகிஸ்தானில் பிரபல எஃப்எம் ரேடியோவில் பணிபுரியும் ஆர்ஜே ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கி, அஜீத் நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற பாடல் ’ஆலுமா டோலுமா’. அனிருத் இசையமைத்திருந்த இந்தப்பாடல் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய இந்தப் பாடல்  பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் வைரலானது. 
இந்நிலையில், மொழி தெரியாவிட்டாலும் 'ஆலுமா டோலுமா' பாடல் என்னை  கவர்ந்து விட்டது என  பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல எஃப்எம்மில் பணிபுரியும் ஆர்ஜே அட்லீல் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'ஆலுமா டோலுமா' அற்புதமான பாடல். ஆனால்,  எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை. இருப்பினும், இந்தப்பாடலை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். மேலும், 'இசைக்கு மொழியே கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com