நாய் வாயில் சவுக்கிதார் - ஜி.வி. பிரகாஷின் வாட்ச்மேன் போஸ்டர்

நாய் வாயில் சவுக்கிதார் - ஜி.வி. பிரகாஷின் வாட்ச்மேன் போஸ்டர்
நாய் வாயில் சவுக்கிதார்  - ஜி.வி. பிரகாஷின் வாட்ச்மேன்  போஸ்டர்

"சவுக்கிதார்" என்ற வார்த்தையுடன் வெளியாகியுள்ள ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சர்வம் தாள மயம்'. ராஜிவ்மேனன் இயக்கிய இந்த திரைப்படம் இசையை மையமாக வைத்து உருவானது. இந்த திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷின் நடிப்பு கவனம் பெறுவதாக இருந்தது. அடுத்து ஜிவி பிரகாஷுக்கு, விஜய் இயக்கத்தில் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாக உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. 

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிவுள்ளது. அதற்கு காரணம் 'சவுக்கிதார்' என்ற வார்த்தை. புதிய போஸ்டரில் ஒரு நாய் வாயில் ஒரு அட்டையை கவ்வி நிற்பது போலவும், அட்டையில் ''நானும் 'சவுக்கிதார்' தான்'' என்ற வாசகம் ஆங்கிலத்தில் இருப்பது போலவும் அமைந்துள்ளது.

பாஜகவின் தேசியத் தலைவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் "சவுக்கிதார்" (மக்கள் பாதுகாவலன்) என தங்களது ட்விட்டர் கணக்கின் பெயர் மாற்றி வரும் வேளையில், 'சவுக்கிதார்’ என்ற வார்த்தையுடன் படத்தின் போஸ்டர் வெளியானதே சமூக வலைதள விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com