'சுப்ரமணியபுரம்' சுவாதிக்கு ஆகஸ்ட் 30 இல் திருமணம் !

'சுப்ரமணியபுரம்' சுவாதிக்கு ஆகஸ்ட் 30 இல் திருமணம் !
'சுப்ரமணியபுரம்' சுவாதிக்கு ஆகஸ்ட் 30 இல் திருமணம் !

சுவாதி ரெட்டிக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுவாதி ரெட்டி. சசிகுமார், ஜெய், கிருஷ்ணா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.  

சுப்பிரமணியபுரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள போன்ற மொழிகளிலும் நடித்துள்ள சுவாதிக்கு ”சுப்பிரமணியபுரம்” படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது. தமிழுக்கு மீண்டும் அவரை இழுக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் அதிகம் ஆர்வம் காட்டாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. தற்போது சுவாதிக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் அவருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானியான, இந்தோனேசியாவைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஜோடி சில நாட்களாகவே காதலித்து வந்தனர். இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து இவர்கள் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். திருமணம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2 ஆம் தேதி கொச்சியில் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com