\
’மரண மாஸ் ஆடியோ’மேக்கிங் வீடியோ ரிலீஸ்

’மரண மாஸ் ஆடியோ’மேக்கிங் வீடியோ ரிலீஸ்

’மரண மாஸ் ஆடியோ’மேக்கிங் வீடியோ ரிலீஸ்
Published on: 

இன்று மாலை வெளியாக உள்ள ’பேட்ட’ படத்தின் பாடல் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் பட்டையை கிளப்பி வசூலை அள்ளி வருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ’பேட்ட’ படத்தில் நடித்து பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும், சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடைபெற்றது. 

ஏற்கனவே ’பேட்ட’ ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து இன்னொரு புகைப்படமும் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மரண மாஸ் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படப்பட உள்ளது. இன்னொரு பாடலை வரும் 7 ஆம் தேதி வெளியிடுகின்றனர். பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று வெளியாக உள்ள மரண மாஸ் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை வெளியாக உள்ள பேட்ட படத்தின் பாடல் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com