\
modha rathiri sumithra devi
modha rathiri sumithra devimodha rathiri

’நடிக்குறதுக்கான முகம் உனக்கு இல்லன்னு சொன்னாங்க..’ மொத ராத்திரி பட நடிகை வேதனை!

மொத ராத்திரி திரைப்படத்தில் பெரும்பாலான ரசிகர்களால் பாராட்டப்பட்ட நடிகை சுமித்ராதேவி, நடிப்பை கரியகராக தேர்வுசெய்தபோது எதிர்கொண்ட அவமானங்கள் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Published on: 

ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மொத ராத்திரி’. இதில் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

modha rathiri
modha rathiri

குடும்பசூழலுக்குள் ஒரு சாமான்ய பெண்ணின் அடிப்படை ஆசை, உரிமை கூட எப்படி மறுக்கப்படுகிறது என்பதை மையமாக கொண்டு, சுதந்திரமாக வாழ நினைத்து கனவுகண்டிருக்கும் பெண்ணுக்கு நடக்கும் கட்டாய திருமணம், அதைச்சுற்றி ஒரு இரவுக்குள் நடக்கும் கதையாக மொத ராத்திரி படமாக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை ஏற்படுத்துவதோடு அதேநேரத்தில் அடக்குமுறைக்கான எதிர்கேள்வியையும் முன்வைத்திருந்தது. படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

modha rathiri
modha rathiri

அதிலும் அடக்குமுறைக்குள் சிக்கிக்கொண்ட ஒரு உலகத்திற்குள் ஒரு கதாபாத்திரம் மட்டும் சரியான கேள்விகளை முன்வைக்கும் விதமாக சுமித்ரா தேவியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. மருதுவின் சகோதரியாக கீர்த்தியாக வரும் அவருடைய நடிப்பு பெரும்பாலான ரசிகர்களால் பாராட்டப்பட்டது. படத்திற்கு பின் அவர் நடித்திருந்த காட்சிகள் ரீல்ஸாகவும், ஷாட்ர்ஸாகவும் வலம்வந்தது.

சுமித்ரா தேவி
சுமித்ரா தேவி

இந்தசூழலில் தான் தற்போது அவர் முன்பு கொடுத்திருந்த ஒரு நேர்காணல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் பகிரப்படும் வீடியோவில் பேசியிருக்கும் அவர், “நடிக்கப் போறேன்னு சொன்னப்ப. எனக்கு அதுக்கான Face Cut இல்ல, கேமரா முன்னாடி நிக்குற அளவுக்கு அழகு இல்லைன்னு சொன்னாங்க. நான் ஏன் கேமரா முன்னாடி நிக்கக் கூடாது? நான் சரியா நடிக்கலனா Perfect இல்லைனு சொல்லலாம். நல்லா நடிக்கிறன்னு எல்லாரும் சொல்லும் போது நான் ஏன் கேமரா முன்னாடி நிக்கக் கூடாது? அதுக்கு என்ன ரூல்ஸ்? அதை ஒடிச்சிட்டு வரணும்னு நினைச்சன், இப்போ இங்க வந்தாச்சு.

அப்புறம் லீட் மெட்டீரியல், ஹீரோயின் மெட்டீரியல்னு ஒண்ணு சொல்றாங்க. அதிலும் எனக்கு முரண் இருக்கு. கதைக்கு தான் ஹீரோயின். ஹீரோயின் இப்படி இருக்குறாங்க என்பதற்காக கதை கிடையாது. கண்ணு. மூக்கு வாய் வச்சி வரது இல்லை. என்னை மாதிரி யாரோ அல்லது நானோ லீட் கேரக்டர்ல நடிக்கும்போதுதான் அது உடையும். இல்லைனா நானும் இதையெல்லாம் நம்பிடுவேன். யாராவது அதை செஞ்சிட்டாங்கனா, நம்ம நெனச்சது நடந்துடுச்சுனு சந்தோஷமா இருக்கும்” என பேசியுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com