\
மகன் பத்தாம் வகுப்பில் வெற்றிப்பெற்றதற்கு ரஹ்மான் வாழ்த்து

மகன் பத்தாம் வகுப்பில் வெற்றிப்பெற்றதற்கு ரஹ்மான் வாழ்த்து

மகன் பத்தாம் வகுப்பில் வெற்றிப்பெற்றதற்கு ரஹ்மான் வாழ்த்து
Published on: 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளதற்கு அவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். அதற்கான தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அத்தேர்வு முடிவில் அமீன் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதற்காக அவரது தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துகள் அமீன். அறிவிலும் ஞானத்திலும் நிறைந்த உலகம் உனக்காக காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com