\
இரண்டு தேசிய விருதுக்காக ரஹ்மானை வாழ்த்திய மகன்

இரண்டு தேசிய விருதுக்காக ரஹ்மானை வாழ்த்திய மகன்

இரண்டு தேசிய விருதுக்காக ரஹ்மானை வாழ்த்திய மகன்
Published on: 

இந்த ஆண்டிற்கான தேசிய விருதுகளில் இரண்டு விருதுகளை பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு அவருடைய மகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

2017 ஆம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருதுகளை அறிவித்தது உள்ளது மத்திய அரசு. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, மணி ரத்னம் இயக்கிய "காற்று வெளியிடை" படத்திற்கு இசை அமைத்ததிற்கும், அதேபோல் மறைந்த ஸ்ரீதேவி நடித்த "மாம்" திரைப்படத்துக்கு பிண்ணனி இசைக்காகவும் என இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார் ஏ.ஆர். ரகுமான். சிறந்த இசையமைப்பாளருக்காக ரகுமான் பெறும் 6வது தேசிய விருது இதுவாகும். இதனால் திரைப் பிரபலங்களும், அவருடைய ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாடகரும் அவருடைய மகனுமான அமீன் தன் ட்விட்டர் பக்கத்தில் அப்பாவுடன் இருக்கும் புகைபடத்தை பதிவேற்றி வாழ்த்துகள் அப்பா என பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com