பிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு ட்விட்டரில் வைத்த செல்லப் பெயர்!

பிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு ட்விட்டரில் வைத்த செல்லப் பெயர்!

பிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு ட்விட்டரில் வைத்த செல்லப் பெயர்!
Published on

நடிகை பிரியங்கா சோப்ரா- பாப் பாடகர் நிக் ஜோனாஸ் ஜோடிக்கு ட்விட்டர் வாசிகள் செல்லப் பெயர் வைத்துள்ளனர்.

தமிழில் விஜய் ஹீரோவாக நடித்த ’தமிழன்’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து வருகிறார். நிக் ஜோனாஸின் உறவினர் திருமணத்தில் பிரியங்கா கலந்துகொண்டார். இதை வைத்து இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று கூறப் படுகிறது. ஆனால், பிரியங்கா சோப்ரா இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.  ஆனால், நிக் ஜோனாஸின் முன்னாள் காதலி டெல்டா கூட்ரெம் (Delta Goodrem), இதை உறுதிப் படுத்தி இருந்தார்.

இந்நிலையில் அம்பானி இல்ல திருமண விழாவில் நிக்குடன் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். அப்போது தனது குடும்பத்தினரிடம் நிக்கை அவர் அறிமுகம் செய்துவைத்தார். அந்த விழாவில் இருவரும் கைகோர்த்தபடி வந்தது, அனைவரின் சந்தேகங்களையும் உறுதிப்படுத்தியது. 

காதல் பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்த பிரியங்கா, இப்போது முதன்முதலாக அதுபற்றி பேசியுள்ளார். ‘சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம் நிக்கிற்கு சிறந்த அனுபவமாக இருந்தது. இதன்மூலம் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டோம். அவர் இந்த பயணத்தை அனுபவித்து ரசித்தார்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர்வாசிகள், அவர்களுக்கு செல்லப்பெயர்களை வைத்துள்ளனர். அதாவது இரண்டு பேரின் (Priyanka chopra- Nick Jonas) பெயர்களையும் இணைத்து பிரிஜோனாஸ் (PriJonas), ஜோ பிரிஸ் (JoPri) என்ற பெயர்களை வைத்துள்ளனர்.

ட்விட்டர்வாசிகள் இப்படி பட்டப்பெயர் வைப்பது ஒன்றும் புதிதில்லை. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் காதலிக்க ஆரம்பித்ததுமே இங்கு செல்லப்பெயரையும் உருவாக்கி விடுகின்றனர். கரீனா- சைஃப் அலிகான் ஜோடிக்கு சைஃபீனா (Saifeena ) என்று செல்லப் பெயர் வைத் தனர். விராத் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடிக்கு விருஷ்கா (Virushka) என்றும் பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலிக்கு பிராஞ்சலினா (Brangelina) என்றும் ஏற்கனவே பெயர் வைத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com