அஜித் பட பேனர்
அஜித் பட பேனர்web

வேண்டாமே விபரீதம்..! அஜித் படத்திற்கு வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர் சரிந்து விழுந்து விபத்து!

திருநெல்வேலியில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்காக திரையரங்கு முன்பு வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
Published on

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட்பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த குட் பேட் அக்லி டிரெய்லர் தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

சரிந்து விழுந்த பேனர்..

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, இரும்பு கம்பிகளால் ஆன பிரமாண்ட பேனர் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது.

அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com