ஆணவக் கொலைகளை மையமாக வைத்து 'களிறு' என்ற படம் உருவாகியுள்ளது.
இதில், விஷ்வக், அனுகிருஷ்ணா, நீரஜா, தீபா ஜெயன், சிவநேசன், தீப்பெட்டி கணேசன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு டி.ஜே.பாலா. இசை, புதுமுகம் என்.எல்.ஜி. சிபி. சி.பி.எஸ். பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோ சார்பில் விஷ்வக், அ.இனியவன் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அமீர் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குநர் சத்யா கூறும்போது, ‘இந்தப்படம் நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவு செய்கிற முயற்சி.
ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் காதலித்து கலப்புத் திருமணம் செய்தால், அது பெரிய சமூகக் குற்றம் என்பதுபோல் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்கார்ந்து பேசினால் அந்தக் காதலர்களின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை போலி அரசியல்வாதிகள், ஊதிப் பெரிதாக்கி, நாட்டுப் பிரச்சினையாக்கி எப்படிக் குளிர் காய்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறோம். படம் முழுவதும் நாகர்கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.