100 ஆண்டுகளில் முதன்முறை கேமராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’

100 ஆண்டுகளில் முதன்முறை கேமராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’

100 ஆண்டுகளில் முதன்முறை கேமராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’
Published on

ஆப்பிரிக்க காடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருப்புநிறச் சிறுத்தை ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த வன உயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர், கென்யாவின் வனப்பகுதியில் உள்ள கருஞ்சிறுத்தையின் புகைப்படத்தை படம்பிடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் லைக்கெப்பியா என்ற இடத்தில் இந்த அபூர்வ வகை கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த வில்பரட், அதனை படம் பிடிக்க முடிவு செய்தார்.

எனவே வனத்தின் வழிகாட்டி உதவியுடன், சிறுத்தை நடமாடும் பல இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி காத்திருந்தார். இந்நிலையில் பெளர்ணமி அன்று இரை தேடி வந்தபோது, கேமராவின் கண்களில் கருஞ்சிறுத்தை சிக்கியது.

இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை புகைப்படம் என்ற பெருமையை இப்புகைப்படம் பெற்றுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com