5 நிமிடத்தில் கதை கேட்டு ஓகே சொன்ன ஆர்யா!

5 நிமிடத்தில் கதை கேட்டு ஓகே சொன்ன ஆர்யா!

5 நிமிடத்தில் கதை கேட்டு ஓகே சொன்ன ஆர்யா!
Published on

ஃபோனில் 5 நிமிடத்தில் கதை கேட்டு கன்னட படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் ஆர்யா.

நிரூப் பண்டாரி, ராதிகா சேதன், அவந்திகா ஷெட்டி, சாய்குமார் உட்பட பலர் நடித்து கன்னடத்தில் ஹிட்டான படம், ’ரங்கி தாரங்கா’. நிரூப்பின் சகோதரர் அனூப் பண்டாரி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அடுத்து அனூப் இயக்கும் படத்துக்கு ’ராஜரதா’ என பெயரிடப்பட்டுள்ளது. நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி நடிக்கும் இதில் நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி நிரூப் கூறும்போது, ’நான் இயக்கி உள்ள ’ரங்கி தாரங்கா’ படத்தை பார்த்துவிட்டு ஆர்யா ஏற்கனவே என்னை பாராட்டியிருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் நடிக்க கேட்டேன். போனில் 5 நிமிடம் மட்டுமே கதை சொன்னேன். கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்தார்’ என்றார்.
ஆர்யா கூறும்போது, ‘இந்தப் படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறேன். கன்னட சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல சிலர் முனைப்புடன் இருக்கிறார்கள். அதில் இந்தப் படமும் இருக்கும். தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். சனிக்கிழமை இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com