விஜய்யின் வேலாயுதம் வெளியாகி 9 ஆண்டுகள்: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த ஜெனிலியா!

விஜய்யின் வேலாயுதம் வெளியாகி 9 ஆண்டுகள்: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த ஜெனிலியா!

விஜய்யின் வேலாயுதம் வெளியாகி 9 ஆண்டுகள்: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த ஜெனிலியா!
Published on

வேலாயுதம் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதையொட்டி நினைவு கூர்ந்துள்ளார் நடிகை ஜெனிலியா

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி வெளியான ’வேலாயுதம்’ படம் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்தது. ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வசூல் சாதனை செய்தது. வேலாயுதம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆவதையொட்டி இயக்குநர் மோகன் ராஜா ’என் வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று’ என்று விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதனை ரிட்வீட் செய்துள்ள நடிகை ஜெனிலியா ’இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம். இந்தப் படத்தின் ஒரு பகுதியை விஜய்யுடன் இணைந்து நடித்து அவரது அபரிதமான நடிப்பை வியந்துப் பார்த்தேன். அவரது ரசிகர்களிடமிருந்து எல்லா அன்பையும் பெற்றேன். என்னை இப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க வைத்த மோகன் ராஜாவுக்கு நன்றி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com