வெளியானது "83" படத்தின் டிரெய்லர் - ரசிகர்கள் உற்சாகம்

வெளியானது "83" படத்தின் டிரெய்லர் - ரசிகர்கள் உற்சாகம்

வெளியானது "83" படத்தின் டிரெய்லர் - ரசிகர்கள் உற்சாகம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுபடமான "83" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்திய அணி 1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‘83’ படத்தினை கபீர் கான் இயக்கி வருகிறார். இது கபில்தேவின் உண்மைக் கதையாகும். ரன்வீர் இந்தப் படத்தில் கபில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். இருவரும் திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.

இந்தப்படத்தில் தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் அவர் இளைய கபில்தேவ் போன்று அப்படியே இருந்தார். அப்படம் கபில் ரசிகர்களை மேலும் சுறுசுறுப்பாக்கியது. இத்திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் தள்ளிப்போனது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படம் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/qzWXDlXAjuo" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com