சினிமா
திரைப்படைப்பாளிகளுக்கு கவுரவம்: இன்று தேசிய விருது விழா
திரைப்படைப்பாளிகளுக்கு கவுரவம்: இன்று தேசிய விருது விழா
64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்குகிறார். தர்மதுரை படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது கவியரசு வைரமுத்துவுக்கும், ஜோக்கர் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது ராஜூமுருகனுக்கு, ஜோக்கர் படப் பாடலைப் பாடிய சுந்தர் ஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது திருநாவுக்கரசுக்கும், ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் விருது ராஜூசுந்தரத்திற்கும் வழங்கப்படுகிறது. அவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் வசந்த் சாய், சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது.