\
அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்
Published on

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் திரையரங்க வாசலில் வைக்கப்பட்ட ‘விஸ்வாசம்’ பட கட்அவுட் சரிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சீனிவாசா திரையரங்கில் இன்று காலை அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட வெளியீட்டையொட்டி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்தப் படத்தைப் பார்க்க ஏராளமான அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரையரங்க வாசலில் குவிந்தனர். 

இந்நிலையில் சீனிவாசா திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு, 15க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய முயன்றனர். அப்போது திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயம் அடைந்த  6 பேரும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த 6 பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com