\
கவினின் ‘லிஃப்ட்’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 இயக்குநர்கள்!

கவினின் ‘லிஃப்ட்’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 இயக்குநர்கள்!

கவினின் ‘லிஃப்ட்’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 இயக்குநர்கள்!
Published on

பிக்பாஸ் புகழ் கவினின் ‘லிஃப்ட்’ படத்தின் மோஷன் போஸ்டரை 6 இயக்குநர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் ‘நட்புனா என்னனு தெரியுமா’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கவின், வினித் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின், மோஷன் போஸ்டரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ்,நெல்சன் திலீப் குமார்,அஜய் ஞானமுத்து,வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com