விவேகம் ரிலீஸ்... அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லி தயார்!
விவேகம் படம் ரிலீசாக உள்ளதைக் கொண்டாடும் வகையில் அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லியை தயாரித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இது அஜீத்தின் 57வது படம். இதனைக் கொண்டாடும் வகையில் 57 கிலோ எடையுள்ள இட்லியை ரசிகர்களின் பார்வைக்கு வைக்க உள்ளனர். இதுகுறித்து தமிழக சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் இனியவன் கூறும்போது, ‘விவேகம் படம் அஜீத்தின் 57வது படம் என்பதால் 57 கிலோ எடையிலான அஜீத் உருவம் பதித்த இட்லியை தயார் செய்துள்ளோம். அதை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். வடசென்னையைச் சேர்ந்த வீர சென்னை அஜீத் ரசிகர் மன்றம் சார்பில் இந்த இட்லி தயாராகி உள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய இட்லி மகாகவி பாரதியார், அன்னை தெரஸா, ஜவஹர்லால் நேரு, காமராஜர், அப்துல்கலாம் போன்றவர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம். இப்போது அஜீத்திற்காக உருவாக்கி இருக்கிறோம்’என்றார். இந்த இட்லி நாளை ராயபுரத்தில் உள்ள பாரத் திரையங்கில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.