டிவிட்டரில் நடிகை ஸ்ருதிஹாசனை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
நடிகர், நடிகைகள் தங்களை பற்றிய தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட டிவிட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் அனைத்து நடிகர், நடிகைகளும் டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி வந்தாலும் சிலர் மட்டும்தான் அதை பரபரப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவர். அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இப்போது 5 பில்லியன் பேராக அதிகரித்துள்ளனர். இதுபற்றி டிவிட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
டிவிட்டரில் ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே 5 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். அதில் இப்போது ஸ்ருதிஹாசனும் சேர்ந்துள்ளார்.