பொடரியில் ஓங்கி தட்டி, “பொறுப்பிருக்காடா ஒங்களுக்கெல்லாம்?’’ என்று கவுண்டமணி மூலம் பொட்டில் அறைந்த மாதிரி 49- ஓ படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குனர் பி.ஆரோக்கியதாஸ்.
“விளைச்சல் நிலத்தையெல்லாம் ரியல் எஸ்டேட்காரன்களிடம் கொடுத்து பில்டிங் கட்டிட்டா, சோத்துக்கு என்னடா பண்ணுவீங்க?” என்பது தான் ‘49 ஓ’ படத்தின் மிக மிக அழுத்தமான பேஸ்மென்ட். ஆட்சி கனவோடு நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களையும் வாரி அடித்து வம்புக்கு இழுத்திருந்தார்கள். அந்தப்படத்தைப் பற்றி இப்போது என்னவாம்? விமர்சன ரீதியாக நற்பெயரைப் பெற்ற அந்தப்படம் தமிழில் வசூல் ரீதியாக சாதிக்கவில்லை. அதன்பிறகு இயக்குநர் தாஸுக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. திடீரென தெலுங்கில் இந்தப்படத்தை சத்தமில்லாமல் ரீமேக் செய்து வருகிறதாம் ஒரு தரப்பு. இதற்காக ‘49 ஓ’ படத் தரப்பிடம் யாரிடமும் உரிமை பெறவில்லை என்பதால் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது படக்குழு.