கோவாவில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
Published on

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இன்று தொடங்குகிறது.

மத்திய அரசின் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்பட உள்ளன. இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ‘செக்சி துர்கா’ என்ற மலையாளப் படத்தையும், ‘நியூடு’ என்ற மராத்தி படத்தையும் திரையிட அவற்றின் தலைப்புகளை காரணம் காட்டி மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து விழாவின் திரைப்படத் தேர்வுக் குழு தலைவர் சுஜோய் கோஷ் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து தேர்வுக் குழு உறுப்பினர்களான இயக்குநர்கள் அபூர்வா அஷ்ரானி மற்றும் ஜியான் கொர்ரியா ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் ‘செக்சி துர்கா’ படத்தின் இயக்குநர் சனல்குமார் சசிதரன், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், திரைப்பட விழா குழுவினருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com