ட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’

ட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’
ட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’

இந்திய திரை உலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். 

இதற்கான காமன் டிபி மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழி ரசிகர்கள் அவருக்கு வைரலாக வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதனால் ட்விட்டர், பேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களின் டிரெண்டிங் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது ‘45 Years of Rajinism’. 

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com