துல்கர் சல்மானுக்கு 4 ஹீரோயின்கள்

துல்கர் சல்மானுக்கு 4 ஹீரோயின்கள்

துல்கர் சல்மானுக்கு 4 ஹீரோயின்கள்
Published on

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய நேரடி தமிழ்ப் படங்களுக்கு பிறகு அவர் நடிக்கும் அடுத்த தமிழ்ப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதை அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றிய பரிசீலனை நடந்து வருகிறது. ‘தெறி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்கிறார். தீனதயாளன் இசை அமைக்கிறார். ரொமாண்டிக் படமான இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com