'விஷால் 32' திரைப்படத்தில் சுனைனா: படப்பிடிப்பு தொடக்கம்

'விஷால் 32' திரைப்படத்தில் சுனைனா: படப்பிடிப்பு தொடக்கம்

'விஷால் 32' திரைப்படத்தில் சுனைனா: படப்பிடிப்பு தொடக்கம்
Published on

விஷால் நடிக்கும் அவரின் 32வது படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கான பூஜை விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்றது.  இதையடுத்து தற்போது முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் சென்னையில் நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். அதேபோல் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். இதுவரை விஷால் நடித்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் இந்த திரைப்படம் வேறுபடும் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com