32 குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஹன்சிகா!
உதவி செய்வதில் வித்தியாசமான நடிகை ஹன்சிகா. சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் அவர் இதுவரை ஆதரவற்ற 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து அவர்களுக்கான கல்வியையும் அளித்து வருகிறார். இந்நிலையில், தனது 27 வது பிறந்தநாளை அவர் வித்தியாசமாக கொண்டாடினார். பூஜை செய்து விட்டு தான் தத்தெடுத்த குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பகிர்தலில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சிறுவயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். 'சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'' என்கிறார்.