சினிமா
அடேங்கப்பா: பாகுபலி 2 டிக்கெட் வாங்க 3.கி.மீ கியூ!
அடேங்கப்பா: பாகுபலி 2 டிக்கெட் வாங்க 3.கி.மீ கியூ!
’பாகுபலி 2’ படத்தின் டிக்கெட் வாங்குவதற்கு 3 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் வரிசையில் நின்றதால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்க, ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹைதராபாத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அங்குள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டரில் டிக்கெட் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் வரிசை ஏற்படுத்தப்பட்டது. இந்த வரிசை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்ததால் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.