இந்தியன்2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்தியன்2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்தியன்2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Published on

இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கிவரும் இந்திய 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றி வந்த சங்கரின் உதவியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ”மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைப் பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com