“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்

“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்

“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்
Published on

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை பாராட்டியுள்ளார். 

அஜித் நடிப்பதற்கு வந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன. 1993ல் ‘அமராவதி’யில் தொடங்கிய அவரது பயணம் ‘விசுவாசம்’வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனை முன் வைத்து அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #26YrsOfUnparalleledAJITH என்று ஹேஷ்டேக் போட்டு இந்திய அளவிலும் சென்னை அளவிலும் ட்ரெண்ட் ஆக்கினர். அந்த அளவுக்கு தீயாக வேலை பார்த்தது அவரது ரசிகர் கூட்டம். ‘ஈடு இணையற்றவர்’ என அவரை இதயத்தில் வைத்து அவரது ரசிகர்கள் தாங்குகிறார்கள். ‘தல’யைப் பற்றி ட்விட்டரில் எதை போட்டாலும் அது ட்ரெண்ட். தமிழ் சினிமாவில் அவர் மாபெரும் நட்சத்திரம். அவர் செய்தியில் வர மாட்டார். ஆனால் அவரைப் பற்றி செய்திகள் வரும். அதுதான் ‘தல’ ஸ்டைல் என்கிறார்கள்.

இந்நிலையில் அஜித்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் ‘விவேகம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர். அப்போதே அஜித்தின் எளிமையை பற்றி இவர் புகழ்ந்திருந்தார். அவர் ட்விட்டரில், “எனது 25 ஆண்டுகால நண்பா. மாபெரும் ஆளுமையாக சிறப்பான வளர்ச்சி. லவ் யூ பிரதர்.. நான் உறுதியாக சொல்கிறேன், உங்களால் எங்களை மறக்க முடியாத நடிப்பாற்றலால் இன்னும் இன்னும் மகிழ்விக்க முடியும். எனக்கு ‘விசுவாசம்’ இருக்கு” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com