திரையுலகில் அடியெடுத்து இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆஸ்கர் விருது கோல்டன் குளோபல் விருதுகள் என சினிமாத்துறையின் உட்சபட்ச விருதுகளை வென்று உலக அளவில் சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த 1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படம் இதேதினம் ஆகஸ்ட் 15ம்தேதி ரிலீசானது. ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் புதுமைகளை நிகழ்த்தி இசை ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இசைப்புயலாய் மாறினார். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழிப்படங்கள், ஹாலிவுட் படங்கள் என உலகம் முழுவது தனது இசையால் புகழ்பெற்றவராக ஏ.ஆர்.ரஹ்மான் திகழ்கிறார். தற்போது விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்கு அவர் இசையமைத்துள்ள நிலையில், பாடல் வெளியாகும் தேதியை எதிர்ப்பார்த்து பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.