25+25+100= மெர்சல்: விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் சர்ப்ரைஸ்!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் குறித்து பல இன்ப அதிர்ச்சிகள் வெளியாகி இருக்கிறது.
வரும் 31ந்தேதியோடு மெர்சல் படப்பிடிப்பி நிறைவடைய இருக்கிறது. அதன் பிறகு போஸ்ட் ப்ரடெக்சன் பணிகளை ஆரம்பித்து ட்தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்த மாதம் 20ம் தேதி ஆடியோ ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்ப அதிர்ச்சி தர காத்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. ஆம் இந்தப்படம் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோருக்கு மைல்கள்.
நடிகர் விஜய் 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படம் 1992ம் ஆண்டு ரிலீசாக 25 ஆண்டுகளாகிறது. மெர்சல் படம் தேனாண்டாள்பிலிம்ஸின் 100வது படைப்பு. ஆக மூவருக்குமே அவர்களது திரைப்பயணத்தில் மெர்சல் படம் ஒரு மைல்கள்.
இதனையொட்டி மெர்சல் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறதுதயாரிப்பு நிறுவனம். அந்த விழாவில் பல இன்ப அதிர்ச்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.