\
காமெடி விருந்தளிக்க வரும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி

காமெடி விருந்தளிக்க வரும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி

காமெடி விருந்தளிக்க வரும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி
Published on: 

நகைச்சுவை நடிகர் வடிவேலு இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யின் அடுத்த பாகம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் உருவாகிறது. வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2006-ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் அமோகமாக வரவேற்றது. இந்நிலையில் அப்படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. 11 ஆண்டுகள் கழித்து உருவாகும் இப்படம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் வடிவேலு மூன்று கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் மன்னர் தோற்றத்தில் வடிவேலு நிற்கும் அசத்தலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com