"2031 ஜோசப் விஜய் எனும் நான்" ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

"2031 ஜோசப் விஜய் எனும் நான்" ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு
"2031 ஜோசப் விஜய் எனும் நான்" ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு - நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என நடிகர் விஜய்யை முதல்வராக சித்தரித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன் முதலாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில், போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுவரொட்டியில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது போல சித்தரித்து, 2031ல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி கூறுகிறேன் என பதவிப் பிரமாணம் எடுப்பது போன்ற வாசகங்களும், 2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com