\
வெளியானது  ‘மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டர்கள் - குஷியில் விஜய் ரசிகர்கள்

வெளியானது ‘மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டர்கள் - குஷியில் விஜய் ரசிகர்கள்

வெளியானது ‘மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டர்கள் - குஷியில் விஜய் ரசிகர்கள்
Published on

மாஸ்டர் படத்தின் புதியப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்றினால் திரை அரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா எனற கேள்வி எழுந்தது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மாஸ்டர் படத்தை திரையரங்கிலே வெளியிட விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்திலிருந்து புதியப்போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் அதனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com