ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் முழு விவரம்!

ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் முழு விவரம்!
ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் முழு விவரம்!

ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட ம், சிறந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 24 பிரிவுகளில் இந்த விருது வழங் கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது விழா, அடுத்த மாதம் 24 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டின் மையமான, டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. 91 வது ஆஸ்கர் விருதுக்கான முழு பரிந்துரை பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது.

வழக்கமாக கோல்டன் குளோப் விருது பெறும் படங்கள், ஆஸ்கர் விருதுகளில் தனி கவனம் பெறுவது வழக்கம். அதில் விருது கிடைத்தால், இங்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அதன்படியே இதுவரை விருதுகளும் அறிவிக் கப்பட்டிருந்தன. இந்த வருடம் அந்த எண்ணம் மாறும் என்றும் சில ஆச்சர்யங்களும் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கோல்டன் குளோப் விருது விழாவில், சிறந்த படத்துக்கான விருதை ’போமேனியன் ரப்சோடி’ பெற்றது. ஆனால், ஆஸ்கரில், ’பிளாக்பந்தர்’, ’ரோமா’ ஆகிய படங்களுக்குத்தான் கடும் போட்டி இருக்கும் என்கிறார் கள். பிளாக்பந்தர், ஆஸ்கரில் நுழையும் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த படம்
1. பிளாக்பாந்தர்
2. பிளாக்கிளான்ஸ்மேன்
3. போமேனியன் ரப்சோடி
4. த பேவரைட்
5.  கிரீன் புக்
6. ரோமா
7. எ ஸ்டார் இஸ் பார்ன்
8. வைஸ்

சிறந்த நடிகர்
1. கிறிஸ்டியன் பலே (வைஸ்)
2. பிராட்லி கூப்பர் (எ ஸ்டார் இஸ் பார்ன்)
3. வில்லியம் டபோ (அட் எடர்னிட்டிஸ் கேட்)
4. ராமி மலேக் (போமேனியன் ராப்சோடி)
5. விக்கோ மார்டென்சன் (கிரீன் புக்)

(ரோமா)

சிறந்த நடிகை
1. யாலிட்ஸா அபாரிசியோ (ரோமா)
2. கிளன் குளோஸ் (த வைஃப்)
3. ஒலிவியா கோல்மன் (த பேவரைட்)
4. லேடி காகா (எ ஸ்டார் இஸ் பார்ன்)
5. மெலிசா மேக்கர்த்தி (கேன் யு எவர் பர்கிவ் மி)

சிறந்த இயக்குனர்
1. ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மன்)
2. பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி (கோல்ட் வார்)
3. யோர்கோஸ் லாந்திமோஸ் (தி பேவரைட்)
4. அல்போன்ஸா குவாரோன் (ரோமா)
5. ஆதம் மெக்கே (வைஸ்)

சிறந்த துணை நடிகர்
1. மஹெர்ஷலா அலி (கிரீன் புக்)
2. சாம் எலியாட் (எ ஸ்டார் இஸ் பார்ன்)
3. ஆதம் டிரைவர் (பிளாக்கிளாஸ்மேன்)
4. ரிச்சர்ட் இ கிரான்ட் (கேன் யு எவர் பர்கிவ் மீ?
5. சாம் ராக்வெல் (வைஸ்)

துணை நடிகை
1. எமி ஆடம்ஸ் (வைஸ்)
2. மரினா டெ டவிரா (ரோமா)
3. ரெஜினா கிங் (இஃப் பியல் ஸ்ட்ரீட் குட் டாக்)
4. எம்மா ஸ்டோன் (த பேவரைட்)
5. ராச்சல் வெய்ஸ் (த பேவரைட்)

வெளிநாட்டு படம்
1. கேபர்னாம் (லெபனான்)
2.கோல்ட் வார் (போலந்து)
3. நெவர் லுக் அவே (ஜெர்மனி)
4. ரோமா (மெக்ஸிகோ)
5. ஷாப்லிப்டர்ஸ் (ஜப்பான்)

ஒரிஜினல் இசை
1. பிளாக் பாந்தர்
2. பிளாக் கிளான்ஸ்மன்
3. இஃப் பியல் ஸ்டீர்ட் குட் டாக்
4. ஐஸல் ஆப் டாக்ஸ்
5. மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்

ஒளிப்பதிவு
1. லூகாஸ் ஜால் (கோல்டு வார்)
2. ரோபி ரியான் (த பேவரைட்)
3. கேலம் டெஸ்சேனல் (நெவர் லுக் அவே)
4. அல்போன்சா குயரோன் (ரோமா)
5. மாத்யூ லிபாடிக்யூ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com