\
மக்களவைத் தேர்தல்: மாதுரி தீக்‌ஷித்தை களமிறக்க பாஜக திட்டம்!

மக்களவைத் தேர்தல்: மாதுரி தீக்‌ஷித்தை களமிறக்க பாஜக திட்டம்!

மக்களவைத் தேர்தல்: மாதுரி தீக்‌ஷித்தை களமிறக்க பாஜக திட்டம்!
Published on: 

வரும் மக்களவை தேர்தலில் புனே தொகுதியில் நடிகை மாதுரி தீக்‌ஷித்தை போட்டியிட வைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

மக்களவை தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று அதற்கான திட்டங்களை பாஜக வகுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பிரபலமான நபர்களை தேர்தலில் களமிறக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி,  புனே மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில், பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம், மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சிக்காக, மாதுரி தீட்ஷித்தை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்தார்.


இந் நிலையில், மகாராஷ்ட்ர மாநில பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, பல்வேறு மக்களவை தொகுதிகளுக்கான பெயர்கள் அடங்கிய இறுதி பட்டியலை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், புனே மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் நடிகை மாதுரி பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளது’ என்றார். 

இதுபற்றி மாதுரி தீக்‌ஷித் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com