\
இந்தியன் 2
இந்தியன் 2முகநூல்

இந்தியன் 2 படத்தில் 20 நிமிடங்கள் குறைப்பு! எதிர்மறை விமர்சனங்கள்தான் காரணமா?

எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக இந்தியன் 2 படத்தில் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி பற்றி விரிவாகப் பார்க்கலாம்..
Published on

இயக்குநர் ஷங்கரின் அடுத்த பிரமாண்டமாக பார்க்கப்பட்ட திரைப்படம், இந்தியன் 2. 28 ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் 2ஆம் பாகமாக இது வெளியானது. பெரும் பொருட்செலவில் தயாராகி, அதைவிட பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்துக்கு கிடைத்த ரிசல்ட்டே வேறு.

கதை, காட்சியமைப்பு, நடிப்பு, இசை என அனைத்து ஏரியாக்களிலுமே படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. மேக்கப்புக்கு பெயர்பெற்ற இந்தியன் படத்தின் 2ஆம் பாகத்தில், கமல்ஹாசனின் கெட்டப் திருப்தியில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. PROSTHETIC MAKEUP என்ற ஒரு முறையை தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியபோது, அது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் கிடையாது.

இந்தியன் 2
INDIAN 2 | ஏன் ஷங்கர்... ஏன் கமல்... இதற்கா இத்தனை பில்ட் அப்..?

அன்றைய காலகட்டத்திலேயே அதை திறமையுடன் கையாண்ட ஷங்கர், இந்தியன் 2 படத்தில் அதை கோட்டை விட்டுவிட்டதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்தன. இதுமட்டுமின்றி, 3 மணி நேர நீளமும், படத்தின் ஒரு மைனஸாக பார்க்கப்பட்டது.

indian 2
indian 2

நெகடிவ் விமர்சனங்கள் அதிகரித்ததன் காரணமாக, களத்தில் இறங்கியது படக்குழு. அதில் 20 நிமிட காட்சிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படத்தில் செண்டிமெண்டுக்காக வைக்கப்பட்ட சில காட்சிகள், ரசிகர்களுக்கு பெரிதாக கனெக்ட் ஆகவில்லை என்பதால், நீளமான வசனங்கள் கொண்ட சென்டிமெண்ட் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், 2ஆம் பாதியில் வரும் சண்டைக் காட்சிகளில் சில நிமிடங்கள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2
செம்ம ராவ்வா இருக்கு! வெற்றிமாறன் பாணியில் இறங்கிஅடிக்கும் தனுஷ்! ஆக்‌ஷனில்மிரட்டும் ராயன் ட்ரெய்லர்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com