2.ஓ இந்திய படமா? தமிழ்ப் படமா? ஹாலிவுட் படமா?: ஷங்கர் என்ன சொல்கிறார்?

2.ஓ இந்திய படமா? தமிழ்ப் படமா? ஹாலிவுட் படமா?: ஷங்கர் என்ன சொல்கிறார்?

2.ஓ இந்திய படமா? தமிழ்ப் படமா? ஹாலிவுட் படமா?: ஷங்கர் என்ன சொல்கிறார்?
Published on

2.ஓ இந்தியப் படம் இல்லை என்றும் இந்தப்படம் ஹாலிவுட் படம் என்றும் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் 2.ஓ. இதன் இசை வெளியீடு கோலாகலமாக நாளை துபாயில் தொடங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஷங்கர், “இந்தப் படம் தரும் அனுபவம் புதுசு. இதில் உள்ள செய்தியும் புதுசு. இந்த வடிவமே புதுசு. ஆகவே 2.ஓ இந்தியப் படம் இல்லை. இது ஒரு ஹாலிவுட் படம்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “3 டியில் உருவாகியுள்ள இது பார்வையாளர்களுக்கு கொடுக்க போகிற அனுபவம் வித்தியாசமானது. இந்தக் கதையை 3டி வடிவில் மட்டுதான் சொல்ல முடிடியும். ஏனென்றால் கதை அப்படி. படத்தை பார்க்கும் போது அதை நீங்களே நிச்சயம் உணருவீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடன் இருந்த நடிகர் அக்‌சய் குமாரோ “நான் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது”என்றார். உடனே குறுக்கிட்ட ஷங்கர் “இது தமிழ்ப் படமல்ல; இந்தியப் படம்” என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com