ஐ.பி.எல். பைனலில் எந்திரன் 2.ஓ டீசர் வெளியீடு ?

ஐ.பி.எல். பைனலில் எந்திரன் 2.ஓ டீசர் வெளியீடு ?
ஐ.பி.எல். பைனலில் எந்திரன் 2.ஓ டீசர் வெளியீடு ?

ஐ.பி.எல். இறுதிச் சுற்றுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் 2.ஓ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் ‘2.ஓ’. இதனை 400 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பல மொழிகளில் வெளிவர உள்ள ஹாலிவுட் படம் என இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஆடியோ விழா சில மாதம் முன்பு துபாயில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தின் படம் என்பதால் வழக்கம் போலவே உலக அளவில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடிகை எமி ஜாக்சன், அக்ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். இது ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம். முதன்முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் இதற்கு வசனம் எழுதியுள்ளார். 

இந்நிலையில் இப்படத்திற்கான விஎஃப்எக்ஸ் பணிகள் தாமதமானதால். படத்தின் வெளியீட்டும் தாமதமாகி வருகிறது. ஆனால், இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே, அப்போது எந்திரன் 2.ஓ படத்தின் டீஸரை வெளியிடலாம் என படக் குழுவினர் யோசித்து வருவதாகவும், அதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com