\
திருமணம் முடிந்த 2-வது நாளே ஷூட்டிங்: பிரியாமணி பிளான்

திருமணம் முடிந்த 2-வது நாளே ஷூட்டிங்: பிரியாமணி பிளான்

திருமணம் முடிந்த 2-வது நாளே ஷூட்டிங்: பிரியாமணி பிளான்
Published on: 

நடிகை பிரியாமணி, தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜை வரும் 23-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘பெங்களூரில் பதிவு திருமணம் செய்கிறோம். இது எளிமையான திருமணம்தான். ஏன் பதிவு திருமணம் என்று கேட்கிறார்கள். நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு குடும்பத்தினரின் மத சென்டிமென்டை கெடுக்க வேண்டாம் என்றுதான் பதிவு திருமணம் செய்கிறோம். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக நடிப்பேன். திருமண வரவேற்பு முடிந்த இரண்டாவது நாளே எனக்கு படப்பிடிப்பு இருக்கிறது’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com