\
சீனாவிலும் வெளியாகிறது ரஜினியின் ‘2.0’...!

சீனாவிலும் வெளியாகிறது ரஜினியின் ‘2.0’...!

சீனாவிலும் வெளியாகிறது ரஜினியின் ‘2.0’...!
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட‌ தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் 2.0 திரைப்படம், அடுத்தாண்டு மே மாதம் சீனாவிலும் திரையிடப்பட உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி வெளியான திரைப்படம் 2.0. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படம் தற்போது திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் 400 கோடி வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 2.0 திரைப்படம் அடுத்தாண்டு மே மாதம் சீனாவிலும் திரையிடப்பட உள்ளது. இதற்காக சீனாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஒய் மீடியாவுடன், 2.0 திரைப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து, பத்தாயிரம் சீன திரையரங்குகளில் 56 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com