\
3டியில் வெளியாகும் 2.0

3டியில் வெளியாகும் 2.0

3டியில் வெளியாகும் 2.0
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள 2.0 படம் 3டியில் வெளியாகிறது. 
ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் 2.0 படம் 2018 ஜனவரி 28ல் வெளியாகும் என்றும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. ரஜினி, அக்‌ஷய்குமார் இருப்பது போன்ற பலூன்கள் ஹாலிவுட்டில் ஏற்கனவே பறக்கவிடப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு கேளிக்கை வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் 2.0 படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com