சினிமா
அக்டோபர் 27-ல் ரஜினியின் '2.0' இசை வெளியீட்டு விழா
அக்டோபர் 27-ல் ரஜினியின் '2.0' இசை வெளியீட்டு விழா
ரஜினியின் '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27-ஆம் தேதி துபாயில் நடைபெற இருப்பதாக அதன் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து ஷங்கர் எடுத்துள்ள படம் '2.0'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது. உலகமே திரும்பி பார்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி நேரலையாக நடக்கிறது. இந்த தகவலை அப்படத்தின் இயக்குநர் ஷங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில்
அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.